யாழ். வடமராட்சி கிழக்கில் நேற்று நடைபெற்ற வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வெற்றிலைகேணியை சேர்ந்த நபர்கள் அபிவிருத்தி குழுத் தலைவரிடம் சில அவசர கோரிக்கையை முன்வைத்தனர்.
அதாவது வெற்றிலைக் கேணியில் பாதுகாப்பு படையினர் காணிகளை அடாத்தாக பிடித்து இருந்து உரிமையாளர்கள் கேட்டு இன்னும் தரவில்லை ஆனாலும் மக்களாகிய நாங்கள் அதனை பெரிசுபடுத்தாமல் இருந்தாலும் படையினர் சட்டவிரோத மண் அகழ்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு என்ன செய்ய போறீங்கள் என்பது ஆகும்.
இதற்கு பதிலளித்த இளங்குமரன் இதற்கான சட்டநடவடிக்கை வெகு விரைவில் எடுக்கப்படும் என கூறினார்.
இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் முறுகல் நிலையில் இந்த கருத்துக்கள் ஒத்திவைக்கப்பட்டது.