யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமானது சுமார் 1 மணி மட்டும் நடைபெற்ற கூட்டமானது இறுதியில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அபிவிருத்திக்குழு தலைவர் பதில் சொல்லாத இடத்தில் கூட்டம் முழுமையான நிறைவை பெறாமல் சலசலப்புடன் நிறைவு பெற்றது.
குறித்த ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியானது அபிவிருத்தி குழு தலைவரிடம் “நீங்கள் வந்ததில் இருந்து நேரம் போகுது சாவகச்சேரி அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு செல்ல போறீங்க என்று சொன்னால் நாம் வடமராட்சி கிழக்கு சார்ந்த முழுமையான பிரச்சினைகளை எவ்வாறு கதைப்பது” என்பது ஆகும்.
இத்துடன் அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு வந்த நபர்கள் எல்லாம் உடனே வெளியேறியதை தொடர்ந்து கூட்டம் நிறைவு பெற்றது.


