இன்று அதிகாலை யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டது.
இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
மீட்கப்பட்ட கஞ்சாவின் எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

