யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள், தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள், அரச திணைக்களங்களின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








