ஈழத்து சிறப்பு மிக்க யாழ்.தென்மராட்சி மட்டுவில் பன்றித் தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய இரண்டாம் பங்குனித் திங்கள் பூசை வழிபாடுகள் இன்று(24) வெகு விமர்சையாக இடம்பெற்றன.
யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் பொங்கல், காவடி, பாற்குடம் எடுத்து தமது நேத்திக்கடன்களை நிறைவு செய்தனர்.
பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழமையாகும். இந்நாளில் அம்மனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்து வழிபாடு மேற்கொள்வர்.
சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடுகள் நடைபெறுவது வழமை. பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர் என்பது நம்பிக்கையாகும்.



