பதுளை – பண்டாரவளை வீதியில் திக்கராவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ADVERTISEMENT
பதுளையிலிருந்து பண்டாவரளை நோக்கி அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பாரவூர்தியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

