யாழ். நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் காவேரி கலா மன்றததின் எற்பாட்டில் இலங்கை பண்பாட்டு சூழலில் இயற்கை உணவினை புரிந்துகொள்ளல் என்னும் கருப்பொருளிலான செயலமர்வு நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது காலநிலை மாற்றம், உணவு பண்பாட்டு சூழல், தொழில் முறை, அன்றாட நடவடிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்ளல், இயற்கை வளத்தினை மேம்படுத்தல், சுகாதார பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனை, ஒவ்வாத மனித மாற்றம், அதிகரித்த வெப்பநிலை, கைத்தொழில் புரட்சியினால் பச்சைவிட்டு விளைவு, பருவகால மாற்றம், மழைவீழ்ச்சி கூடுதல், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இசைவாக்கமடைதல் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகள் ஊடாக விவசாயத்தில் வீழ்ச்சியடைந்த தாவரங்களை கண்டறிந்து (மரங்கள்,செடிகள்,கொடிகள்) மீண்டமைக்கான காரணத்தினையும் அவதானித்து அதற்கான தீர்வுகளும் வழங்கப்படவுள்ளது.
இவ் நிகழ்வுக்கு நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கினார்.
இதில் யாழ். பல்கலைகழக விவசாய பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜேம்சன் அரசகேசரி, யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியர் பூபாலசுந்தரம் ஐங்கரன், விவசாய போதனாசிரியர் நாகேஸ்வரன் ஹரிநேசன் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதில் காவேரி கலாமன்றத்தின் அலுவலகர்கள், யாழ் நல்லூர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.






