உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனுப்பத்திரங்கள் தனிச்சிங்களத்தில் பூரணப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கையளிக்கும் பணி தற்போது இடம்பெற்றுவருகின்றது.
இந்தநிலையில் ஆட்சியில் இருக்கும் தேசியமக்கள்சக்தி வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுவினை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் தலைமையில் இன்று தாக்கல்செய்தது.
குறித்த வேட்புமனுப்பத்திரங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மாத்திரம்பூரணப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக வவுனியா தெற்குதமிழ் பிரதேசசபையின் வேட்புமனுபத்திரமும் தனிச்சிங்கள மொழியில் மாத்திரமே பூரணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




