யாழ். மாவட்டத்தில் உள்ளள 17 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இந்த வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ADVERTISEMENT
இங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெ.ரஜீவன் உள்ளிட்ட17 சபைகளுக்கான முதன்மை வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மதியம் 12 மணிக்கு நிறைவடைகின்றது.


