வடக்கு ரயில் பாதையில் இன்று இரண்டு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குருநாகல், கனேவத்த மற்றும் வெல்லாவ இடையேயான ரயில்வே பாதையில் உள்ள தண்டவாளத்தில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக அப்பகுதியில் செல்லும் இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று ஞாயிற்றுக்கிழமை (9) காலை 8.20 மணிக்கு குருநாகல் ரயில் நிலையத்திலிருந்து மஹாவ சந்திக்குப் புறப்பட இருந்த ரயில் மற்றும் காலை 10.50 மணிக்கு மஹாவ சந்திக்கு குருநாகல் நோக்கிப் புறப்பட இருந்த ரயில் ஆகியனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.