கிளீன் சிறீலங்கா Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
கிளீன் சிறீலங்கா Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
இன்றையதினம் காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாகிய இக்கலந்துரையாடலில் பலவிடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அனைவரும் இணைந்து நடைமுறைப்படுத்த இணக்கம் ஏற்படுத்தப்பட்ட இருந்தது. அவையாவன
- கழிவுகளை தரம் பிரித்து சேகரித்தல்- பிரதேச சபை
- கழிவுகள் போடும் பொது தொட்டிகளை நகரத்தில் நிரந்தரமாக அமைத்தல்- பிரதேச சபை
- கழிவுகளை கையேற்கும் நிலையத்தினை அமைத்தல்- பிரதேச சபை
- பிளாஸ்ரிக் போத்தல்கள் போடும் தனியான தொட்டிகளை அமைத்தல்- பிரதேச சபை
- பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இலவச குப்பைத்தொட்டிகளை வழங்குதல்- பிரதேச சபை
- ஒவ்வொரு மாதமும் இறுதி செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு நகரத்தினை அனைவரும் இணைந்து சுத்தம் செய்தல்- மீறுபவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுத்தல்- MOH, சுற்றுசூழல் பொலிஸார், பிரதேச சபை, வர்த்தக சங்கம்
- நகரத்தில் உள்ள மாடுகளை கிழமைக்கு 3 தரம் பிடித்தல்- பிரதேச சபை
- மாட்டுக்கான தண்டத்தினை 3000 ரூபாவில் இருந்து 10000 ரூபா வரை அதிகரித்தல்- பிரதேச சபை
- அனைத்து மாடுகளுக்கும் இலக்க தோடு குத்தல்- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மற்றும் கிராம அலுவலர்கள்
- இறப்பின்போது நகரத்தில் வெடி கொழுத்துதலை தடைசெய்தல்- பிரதேச சபை, பொலிசார், கிராம அலுவலர்
- வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதிகளின் மத்திய ஒதுக்கு உள்ள பகுதிகளில் சோளர் விளக்குகளை பொருத்துதல், பூங்கன்றுகளை வளர்த்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச சபை
- வீதியின் இருமருங்கிலும் கொன்றை மற்றும் புங்கை மரங்களை வைத்தல்- பிரதேச செயலகம், பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை
- புதுக்குடியிருப்பு வரவேற்பு வளைவை நிர்மாணித்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மேம்பாட்டு பேரவை
- அறிவித்தல் மற்றும் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்தல்- பிரதே சபை, வங்கிகள், பிரதேச செயலகம்
- வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்காக புதுக்குடியிருப்பு சந்திக்கருகாமையில் புதுமாத்தளனை நோக்கிய வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒருபக்க வெள்ளத்தினை மற்றைய பக்க வாய்காலுக்கு கொண்டுசெல்வதற்காக பாலம் ஒன்றை அமைத்தல்- வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலகம்
- புதுக்குடியிருப்பு சந்தியில் கண்கானிப்பு கமராவை நிர்மாணித்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை
- கழிவகற்றலின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றல்- பிரதேச சபை, MOH
- புதுக்குடியிருப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களின் விபரங்களை காட்சிப்படுத்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட
இதில் உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச வைத்திய அதிகாரி, வைத்தியசாலை அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர், வங்கி முகாமையாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலர், வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை, முல்லை சமூக மேம்பாட்டு நிறுவன அலுவலர், பொலிசார், இராணுவம், ஆடைக்கைத்தொழில் மனிதவள முகாமையாளர், முச்சக்கர வண்டி சங்கம், மற்றும் துறைசார் அலுவலர்கள் பங்குபற்றினார்கள்.



