கொஹுவளை பொலிஸ் பிரிவில் சுமனராம வீதியில் கார் மோதி வெள்ளிக்கிழமை (07) தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த தாய் கொஹுவளை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் ஆவார்.
கார் ஒன்று கல் மீது மோதி செயலிழந்துள்ள நிலையில், கார் சாரதியின் தாயும் மனைவியும் இணைந்து குறித்த கல்லை அகற்ற முயன்றுள்ளனர். இதன்போது காரானது திடீரென இயங்கியுள்ள நிலையில் சாரதியின் தாய் மீது மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சாரதியின் தாய் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான, மேலதிக விசாரணைகளை கொஹுவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.