பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையை மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் உட்பட 8 சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 31, 2023 அன்று மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் உள்ள W 15 ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.