பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
கைபர் பக்துன்குவாவின் மாகாணத்திலுள்ள மசூதியில் நேற்று (28) மதியம் நடைபெற்ற தொழுகையின்போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் தலைமை இமாம் உள்பட 8 பேர் தற்போது பலியாகியுள்ளனர். மேலும், படுகாயமடைந்த 17 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜமாய்த் உலமா இஸ்லாம் பிரிவின் தலைமை இமாம் மற்றும் மதரஸா-இ-ஹக்கானியா மசூதியின் பொறுப்பாளருமான ஹமீதுல் ஹக் ஹக்கானியை படுகொலை செய்யும் நோக்கத்தில் இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டிருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.