வவுனியாவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரயில் மீது காரொன்று மோதி இன்று(01) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தானது வெலிகம, ஹெட்டி தெருவின் இரண்டாவது வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.
வெலிகம நகருக்கு மேலதிக வகுப்பிற்குச் செல்வதற்காக தாயும் மகளும் பயணித்த கார் ரயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த தாயும் மகளும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.