மட்டுவில் மோகனதாஸ் சனசமூக, நிலைய 77வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று காலை மோகனதாஸ் விளையாட்டு
மைதானத்தில் மரம் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
மோகனதாஸ் சனசமூக நிலையத்தின் வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர்களையும் கழகத்தின் வளர்ச்சியில் பங்காற்றி அமரத்துவம் அடைந்தவர்களையும் நினைவுகூரும் முகமாக விளையாட்டு மைதானத்தில் மரம் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கழக நிர்வாக உறுப்பினர்கள், கடந்தகால நிர்வாகத்தினர், கிராம மக்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
அத்துடன் மோகனதாஸ் சனசமூக நிலைய ஆரம்ப கால செயல்பாட்டாளர்களுக்குமான கெளரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



