ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுவாவெவ பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் ராகமை பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.
ராகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராகமை பகுதியில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.