வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தனது குடும்பத்துடன் புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சடடைந்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினராகவும், பின்னர் வடமாகாண சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.
மாகாண சபை காலம் முடிவடைந்த பின்னர் அரச வைத்திய சேவையில் மீண்டும் இணைந்து கொள்ள முயற்சிகளை மேற்கொண்ட போதும், அரசியல் பழிவாங்கள் காரணமாக அவரது விண்ணப்பம் அரசினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்ற பொது தேர்தலிலும் போட்டியிட்டார். எனினும் தொடர்ச்சியாக இவர் பெரும்பான்மை கட்சியினால் அரசியல் ரீதியான பழிவாங்கள்களுக்கும், இடையூறுகளுக்கும், குறிப்பாக அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளார்.
மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலக அர ஊழியர் ஒருவரின் கொலை தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்ற வழக்கு விசாரணைகளின்போது பிரதான சாட்சியாக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு திட்டமிட்டு குறித்த வழக்கு விசாரணையுடன் தொடர்புபடுத்தி அச்சுறுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மற்றும் மனவுளைச்சல் காரணங்களால் தனது குடும்பத்துடன் புலம்பெயர் நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி இடம் பெற்று வரும் நிலையில், மன்னார் உள்ளடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பலர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நாட்டில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் தெரிய வருகிறது.
