பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று(26) இடம்பெற்றது.
காலை 4.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 6.30 மணியளவில் ஸ்தம்ப பூசையும்,
காலை 7.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று
காலை.10 .30 மணியளவில் நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப் பெருமான் இரதத்திலே ஆரோகணித்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்தார்.
தேர்த் திருவிழாவிற்கு பெருந்தொகையான அடியார்கள் பங்குபற்றி வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதேவேளை இன்றைய தினம் இரவு சிவராத்திரி விசேட பூசை வழிபாடுகள் மற்றும் கலை நிகழ்வுகள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளதுடன் நாளை காலை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
15 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.







