இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் கடற்கரை பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் நேரப்படி காலை 6:55 மணிக்கு (2255 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது வடக்கு சுலவேசி மாகாணத்திற்கு அருகில் கடலோரத்தில் 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின் படி நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.