மத்திய ஆப்பிரிக்காவின் கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் 21ம் தேதி வடமேற்கு பிராந்தியமான போலோகோ நகரில் இந்த நோய் பாதிப்பு முதன் முதலாக கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரு மாதத்துக்குள் சுமார் 431 பேருக்கு இந்த காய்ச்சல் பரவி உள்ளதுடன் அவர்களில் 53 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
நோய்த் தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் 48 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெளவால் கறியினை உட்கொண்ட 3 சிறுவர்களிடமே இந்த நோய் ஆரம்பத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.