வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு பதிவாளராகவும் மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளராக, பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதம் திரு. குணசிங்கம் துசாந்தன் அவர்களுக்கு நேற்றைய தினம் (24.02.2025) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பிரதிப்பதிவாளர் நாயகம், உதவிப் பதிவாளர் நாயகம் மற்றும் காணி மாவட்ட பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


