பங்களாதேஷிலுள்ள காக்ஸ் பஜார் விமானப்படைத் தளத்தின் மீது குறித்த பகுதியிலுள்ள பொது மக்கள் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்ததோடு சிலர் காயமடைந்துள்ளனர்.
பங்களாதேஷிலுள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்திலுள்ள விமானப்படை வீரர்களுக்கும், குறித்த பகுதியிலுள்ள பொது மக்களுக்கும் சில காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளநிலையில் இன்று (24) இரு தரப்புக்குமிடையில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 30 வயதான ஷிஹாப் கபீர் என்பவர் கொல்லப்பட்டார். குறித்த சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதோடு குறித்த இடத்திற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு விமானப்படைத் தளத்துக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.