மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டமை ஒன்பது அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் இன்று (24.02.2025) பிரீத்தி, பத்மன் சூரசேன, யசந்த கோடகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஷிரான் குணரத்ன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது.
இதன்போது, தேசபந்து தென்னக்கோன் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதற்கு தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.
சட்டத்தரணியின் கோரிக்கையை கருத்தில் கொண்ட நீதவான், இந்த மனுக்கள் எதிர்வரும் மே மாதம் 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டுள்ளார்.