நேற்று மதியம் மூன்று மணிக்கு சிவனடி பாத மலைத் தொடர் வனப் பகுதியான லக்ஷபான தோட்ட வாழமலை எமில்டன் வன பகுதியில் திடீர் என பாரிய தீ பரவியுள்ளது என நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை முதல் மவுஸ்சாகலை முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் ரக்காடு கிராமத்தில் உள்ள அதிரடி படையினர் லக்சபான தோட்ட தொழிலாளர்கள் இணைந்து தீயை அணைக்க சிரமப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான வெப்பம் தொடர்ந்து நிலவுவதால் தீயை கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது எனவும் 25 ஹெக்டையர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் அப் பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நீர் ஊற்றுகள் வற்றி போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
அத்துடன் தொடர்ந்து தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.