வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை கரவெட்டியின் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு பேடகம் மலர் 2 வெளியீட்டிவிழாவும், வாசிப்பு மாதத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் தலைமையில் நேற்று 23/02/2025 பிற்பகல் 3.00 மணியளவில் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டன.
மங்கள சுடர்களை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராசா, பிரதேச சபை செயலாளர் உட்பட சிறப்பு கௌரவ விருந்தினர்களாக கலந்துகொண்ட பலரும் ஏற்றிவைத்தனர்.
அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. அரங்க திறப்புரையை ஓய்வு பெற்ற அதிபர் கிருஸ்ணபிள்ளை நடராசா நிகழ்த்தினார்.
தலைமை உரையினை நிகழ்வின் தலைவரான வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் ஹம்சநாதன் நிகழ்த்தினார்.


