சுழிபுரம் கடற்கரை பகுதிகளில் கிளீன் சிறீலங்கா செயற்திட்டம் அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள் எனும் தொனிப்பொருளில் இன்றைய தினம் ஒரு அழகிய கடற்கரை கவர்ச்சியான சுற்றுலா தலம் எனும் நோக்கினை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது.
சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் தலைமையில் சுழிபுரம் திருவடிநிலை ,புளியந்துறை ,சவுக்கடி ஆகிய கடற்கரை பகுதிகளில் காலை 8 மணிமுதல் மதியம் 11 மணிவரை குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது .இதன் பொழுது சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினர், வலிகாமம் மேற்குப் பிரதேச சபையினர் , பொதுமக்கள், சங்கானை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த திட்டத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு சுழிபுரம் மேற்கு அலைமகள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தாகசாந்தி மற்றும் காலை நேர சிற்றுண்டி வழங்கப்பட்டது.




