• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 15, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!

Mathavi by Mathavi
May 12, 2025
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
இடப்பெயர்வின் வலி எனக்கும் நன்றாகவே தெரியும் – ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

நாங்கள் இந்தப் பகுதிகளை விட்டு இடம்பெயராமல் இருந்திருந்தால் இன்று நாம் எங்கேயோ முன்னேறிச் சென்றிருப்போம். அதைக் கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கின்றது. இடப்பெயர்வின் வலி உங்களைப்போல எனக்கும் நன்றாகவே தெரியும். நானும் உங்களைப்போன்று இடம்பெயர்ந்து சென்ற ஒருவன்தான் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய சனசமூக நிலையத்துடன் இணைந்த கல்வி நிலைய கட்டடத் திறப்பு விழா மயிலிட்டி சனசமூக நிலைய வீதியில் இன்று திங்கட்கிழமை (12.05.2025) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்டடத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்ததுடன், பெயர்பலகையையும் திரைநீக்கம் செய்து வைத்தார். அதன் பின்னர் இடம்பெற்ற மேடை நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது,

தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராக நான் கடமையாற்றியிருக்கின்றேன். 1996ஆம் ஆண்டு நாம் இங்கு வந்தபோது இடம்பெயராமல் தங்கியிருந்த தையிட்டி மக்கள் சிலரை இராணுவத்தினருடன் வந்து நான் பார்வையிட்டிருந்தேன். அப்போது மயிலிட்டி உள்ளிட்ட இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வீடுகள் அனைத்தும் நல்ல நிலையில் இருந்ததை நான் நேரடியாகக் கண்டிருந்தேன். 2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக யாழ். மாவட்டத்துக்கு நான் வந்த பின்னர் மயிலிட்டிப் பகுதியை வந்து பார்வையிட்டபோது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருந்தது. நல்ல நிலையில் இருந்த வீடுகள் பலவும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு மாவட்டச் செயலராக நான் வரும்போது மாவிட்டபுரம் சந்தி வரையிலேயே முழுமையாக விடுவிக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர் படிப்படியாக இங்கே மீள்குடியேற்றம் நடைபெற்றது. அன்றைய காலத்தில் யாழ். மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கா, தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர் மீள்குடியமர்வு செயற்பாட்டுக்கு முழுமையாக ஒத்துழைத்திருந்தார்கள். அவர்கள் இன்னும் சில காலம் இருந்திருந்தால் மேலும் பல காணிகளை எம்மால் விடுவித்திருக்க முடியும்.

காணிகளை விடுவிக்கும்போது மகேஸ் சேனநாயக்க சொல்வார், நீங்கள் அடுத்த வாரமும் எங்களிடம் வருவீர்கள். அடுத்த காணிகளை விடுவிக்கக் கோருவீர்கள் என்று நகைச்சுவையாகச் சொல்வார். அப்படித்தான் இந்தக் காணி விடுவிப்புக்களைச் செய்தோம். மாவட்டச் செயலராக இருந்தபோது என்னுடன் மிகச் சிறந்த அணி இருந்தது. அப்போது யாழ். மாவட்டச் செயலகத்தில் மேலதிக மாவட்டச் செயலர் – காணி – பணியாற்றிய முரளிதரன் மற்றும் இந்தப் பகுதி பிரதேச செயலர்களாக இருந்த சிறிமோகன், சிவசிறி ஆகியோரும் என்னுடன், இராணுவத்தினருடன் கலந்துரையாட வருவார்கள். அடிக்கடி இராணுவத்தினரைச் சந்தித்து காணி விடுவிப்புக்கான கோரிக்கையை முன்வைத்தே இவற்றைச் சாத்தியமாக்கியிருந்தோம்.

தற்போது இங்கு வரும்போது இந்தப் பகுதிகளைப் பார்வையிடும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. வீடுகளை அமைத்து கட்டடங்களை அமைத்து முன்னேறியிருக்கின்றீர்கள். உங்கள் கிராமத்தை வளர்ச்சியடையச் செய்திருக்கின்றீர்கள்.

நிகழ்வின் தலைவர் தனது உரையில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். நான் அவர் பேசிக் கொண்டிருக்கும்போதே இந்தப் பகுதிக்கான ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீபவாணந்தராஜாவுடன் பேசிக் கொண்டிருந்தேன். விரைவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்குபடுத்தி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவோம், என்றார்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வலி. வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எஸ்.ஸ்ரீபவாணந்தராஜா, நீண்ட காலம் மூடப்பட்டிருந்த பலாலி வீதி திறக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியதுடன் காணி விடுவிப்புத் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன், இந்தப் பிரதேச மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்கள் விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டனர். மேலும், திருப்பூர் இளைஞர் நன்பணி ஒன்றிய கட்டடம் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமாக நிதியில் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

கிழக்கு மாகாணத்தில் விசேட டெங்கு கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் ஆரம்பம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள்...

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக ஏ.ரி.எம். றாபி நியமனம்

by selvan
June 15, 2026
0

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியானஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று திங்கட்கிழமை (15) இந்த...

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

அம்பாறையில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமம்!

by selvan
June 15, 2026
0

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் சேவையை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 24 மணி நேர கடமை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள...

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

பாலச்சந்திரனின் மரணம் பற்றி பேசும் ஹக்கீம் முஸ்லிம் பொலிஸாரின் படுகொலையை மறந்தது ஏன்? – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு கேள்வி

by selvan
June 15, 2026
0

நாடாளுமன்றத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு மற்றும் உரிமை தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்...

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

ஜே.வி.பி மற்றும் எல்.ரி.ரி.ஈ யினர் அழித்த சொத்துக்கள் நாட்டின் கடன் தொகையை விட அதிகம் – நாமல் சாடல்!

by selvan
June 15, 2026
0

இலங்கையின் தற்போதைய ஒட்டுமொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் சுமையை விட இரண்டு மடங்கு அதிகமான பெறுமதியுடைய தேசிய சொத்துக்களை ஜே.வி.பி. மற்றும் எல்.ரி.ரி..ஈ அமைப்புகள் கடந்த...

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

மயிலிட்டி மக்கள் துயர் களைய துணை நிற்போம் – மக்கள் போராட்டத்தில் ஈ.பி.டி.பி. உறுதி.!

by Mathavi
June 15, 2026
0

வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இன்று...

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

மயிலத்தமடு, மாதவனை தொடர்பான நூல் வெளியீட்டு நிகழ்வு.!

by Mathavi
June 15, 2026
0

எமக்கான நிலம் கிடைக்கப்பெறும் வரையில் நாம் தொடர்ந்து போராடுவோம். மகாவலி எம்மைப் பயன்படுத்த முடியாது, நாம் மகாவலிக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்ல. நமக்கு என்று வடக்கு - கிழக்கிலே...

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு.!

by Mathavi
June 15, 2026
0

தீப்பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது. தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ...

தங்க நகைகள் கொள்ளை; இருவர் கைது.!

மரை இறைச்சியுடன் இருவர் கைது.!

by Mathavi
June 15, 2026
0

பொகவந்தலாவ செப்பல்டன் பகுதியில் சட்டவிரோதமாக வலை விரித்து மரையை கொன்று இறைச்சி விற்ற இருவர் பொலிஸாரிடம் சிக்கினர். பொகவந்தலாவை, செப்பல்டன் தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த மரை ஒன்றை...

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

மன்னாரில் இடம்பெற்ற வர்த்தக சந்தை மற்றும் விற்பனை கண்காட்சி.!

by Mathavi
June 15, 2026
0

மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட வர்த்தக சந்தையும், விற்பனை கண்காட்சி மற்றும் தொழிற்சந்தை இன்று திங்கட்கிழமை (15) காலை 10 மணியளவில் மன்னார் நகர மத்திய...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி