நாடு பூராகவும் இடம் பெறும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கடற்கரையை சிரமதானம் செய்யும் பணி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் காலை 8:30 மணியளவில் ஆரம்பமானது.
இராணுவம், கடற்படை, பருத்தித்துறை பிரதேச சபை என்பன கிராம மக்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த மணல்காடு கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், கட்டைக்காடு படைப்பிரிவு தளபதி கேணல் கருணாதிலக, தலைமையிலான படையினர், லெப்ரினன் கேணல் சுரங்க, மருதங்கேணி இராணுவ சிவில் அதிகாரி லெப்ரினன் கேணல் மேஜர் அழககோன், கிராம மக்கள் என சுமார் 600 பேர்வரை குறித்த கடற்கரை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்து கொண்டனர்.



