ஹபராதுவ பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டில் படுக்கையறை மெத்தையில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களை மறைத்து வைத்திருந்த குற்றச் சாட்டில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹபராதுவ ஹருமல்கொட, வெல்லகேவத்தை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பெண்ணின் வீட்டைச் சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவோல்வர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரில்வர், 2 பிஸ்டல் தோட்டாக்கள் மற்றும் 2 வாள்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.