கனேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் கான்ஸ்டபிள் உள்ளிட்ட 2 சந்தேக நபர்களையும் எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேகநபர்களும் இன்று (22) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.