அரலகங்வில காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெஹெரகம் பகுதியில் நேற்று(20) காட்டு யானை தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
72 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் சகோதரர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.