வடமராட்சி கிழக்கு யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியானது இன்றைய தினம்(20) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது
பாடசாலையின் அதிபர் க.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் மதியம் 01.30 இற்கு விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமாகிய விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக பாடசாலையின் முன்னாள் அதிபர் சி.இரங்கநாதன் (அதிபர் – யா/பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை) சிறப்பு விருந்தினராக கி.பாக்கியநாதன் (உடற்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் – வடமராட்சி கல்வி வலயம்) என்பவர்கள் கலந்து கொண்டனர்.
சுவட்டு மற்றும் மைதான நிகழ்வுகளுடன் இடைவேளைக்கான இசைவும் அசைவும் நிகழ்வு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ், பரிசில்கள் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பெற்றோர் மற்றும் பழைய மாணவர்வகளுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பெற்றோர், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பிரதேச மக்கள் என பலரும் குறித்த விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.


