வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற முறையில் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு வட்டுவாகல் நந்திக்கடல் களப்பில் சட்டவிரோதமாக அனுமதியற்ற சட்ட விரோத படகு, வலைகள், கூட்டு வலைகளை பயன்படுத்தி தொடர்ச்சியான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரு சிறுவர்கள் உட்பட ஆறு நபர்களை கைது செய்யப்பட்டு சிறுவர்கள் என்பதால் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நால்வரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்வள திணைக்களத்தின் ஒத்துழைப்புடன், முல்லைத்தீவு மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கமும், வட்டுவாகல் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும், செல்வபுரம் கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினரும், இலங்கை கடற்படையினரும் இணைந்து சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.




