பல்லேகலே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி – மஹியங்கனை வீதியில் ஹேன்வல பகுதியில் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற விபத்தில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பல்லேகலே பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கம்பளை தும்தெனிய பிரதேசத்தைச் நேர்ந்த 40 வயதுடைய பெண் ஆவார்.
திகனவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியில் பயணித்த பெண் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் பாதசாரி யக்கஹபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கார் சாரதி, வாரப்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர், ரஜவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் யக்கஹபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.