Masters என விபரிக்கப்படும் சர்வதேச முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் 6 அணிகளுக்கு இடையிலான சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் நவி மும்பை, வடோதரா, ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு குமார் சங்கக்கார, இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வொட்சன், இங்கிலாந்து மாஸ்டர்ஸ் அணிக்கு ஒய்ன் மோர்கன், மேற்கிந்தியத் தீவுகள் மாஸ்டர்ஸ் அணிக்கு ப்றயன் லாரா, தென் ஆபிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு யக் கலிஸ் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கும் இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கும் இடையில் நவி மும்பை விளையாட்டரங்கில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ஆரம்பமாகவுள்ளது.