மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் வெப்பநிலை காரணமாக தற்போது ஹட்டன் சிங்கமலை பகுதியில் பாரிய தீ.
சற்று முன் ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள சிங்கமலை சுரங்க பகுதியில் பாரிய தீ பரவியது. தற்போது வரை இரண்டு ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது என ஹட்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கட்டுபடுத்த முடியாத நிலையில் தீ பரவியுள்ளது எனவும் இதனால் சுமார் 10 ஏக்கர் வனப் பகுதி நாசமடைய வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த தீ பரவலின் போது அங்கு வசிக்கும் வன ஜீவராசிகள் மற்றும் பறவைகள் மற்றும் நீர் ஊற்று இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விஷமிகள் வைத்த தீயினால் இந்த விளைவு ஏற்பட்டு உள்ளது என ஹட்டன் பொலிசார் தெரிவித்தனர்.