வரக்காப்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லியத்த பகுதியில் உள்ள குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்த நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வரக்காப்பொல பொலிஸார் தெரிவித்தனர்.
உடகஹவத்த, பஹல வெலிகல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.