மன்/ இரணை இலுப்பைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 1சி பாடசாலையாக இன்று (19.02) உத்தியோக பூர்வமாக தரமுயர்த்தப்பட்டதுடன், உயர்தர வகுப்பும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் சாதாரண தரம் வரை காணப்பட்ட குறித்த பாடசாலையை தரமுயர்த்துமாறு அப் பிரதேச மக்கள், பாடசாலை சமூகத்தினர் கடும் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த பாடசாலை தரம் உயர்த்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மடு கல்வி வலய பணிப்பாளர், மடு பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





