• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 13, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இனப் பிரச்சினைக்கு சமஷ்டியே ஒரே தீர்வு; அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்.!

Mathavi by Mathavi
February 19, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
இனப் பிரச்சினைக்கு சமஷ்டியே ஒரே தீர்வு; அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள்.!
Share on FacebookShare on Twitter

“ஜனாதிபதித் தேர்தலில் புதிய அரசமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்பட்டது. ஆனால், தற்போது அது கிடப்பில் போடப்பட்டது. போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட ஜே.ஆர்.ஜயவர்தன 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு இன முரண்பாட்டுக்கு சமஷ்டி சிறந்த தீர்வு என்று குறிப்பிட்டார். ஆகவே, தற்போதைய அரசுக்குச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தர்ப்பத்தைச் சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

  • இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

ADVERTISEMENT

“வரவு – செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான அரச செலவினம் 4218.2 பில்லியன் ரூபா என்று ஜனாதிபதியினால் செலவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், வரவுக்கான வழி என்ன என்பது தொடர்பில் தெளிவாகக் கூறப்படவில்லை.

100 வீத செலவில் 69 வீதமானவை நடைமுறை செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 31 வீதமானவை மட்டுமே முதலீடுகளாக உள்ளன. நாட்டின் பொருளாதாரம் மூலதன செலவுகள் ஊடாகவே கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் மிக நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றுள்ள அரசு இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக பாதுகாப்புச் செலவுக்கு மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் 11 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம், சண்டை இல்லாத நேரத்தில் 442 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்னும் பெரும்பாலான மக்கள் குடியேற்றப்படவில்லை. மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை. தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில், மிதமிஞ்சிய இராணுவ ஆளனியுடன் இருக்கும் இலங்கையில் 11 வீதம் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அதற்கான எதிர்ப்பையும் பதிவு செய்கின்றோம்.

இதேவேளை, இந்த நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும். வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப புலம்பெயர் இலங்கையர்களே வாருங்கள் என்று ஜனாதிபதி அழைத்துள்ளார். அவர்களின் தொடர்பை ஜனாதிபதி விரும்புகின்றார். ஆனால், இந்த மண்ணில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசில் உள்ளவர்கள் பேசுவதற்குத் தயங்குகின்றனர்.

சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் இலங்கையைப் போன்று முன்னேற்றமடைய வேண்டும் என்று ஒருகாலத்தில் குறிப்பிட்டது. ஆனால், இலங்கை 1940இல் எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் நாடு இருக்கின்றது. எனினும், குறித்த நாடுகள் இப்போது இலங்கைக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளன. அதற்குக் காரணம், அந்த நாடுகளின் ஒற்றுமையும் வளமுமே ஆகும்.

இந்நிலையில் புலம்பெயர்ந்தோரே வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும்போது இந்த நாட்டில் தமிழரின் அடிப்படை உரிமைகள் தமது தேசத்தில் தேசிய இனமாக அடையாளப்படுத்தும் உரிமையை இந்த நாடு எவ்வாறு வழங்கப் போகின்றது என்ற கேள்விகள் அவர்களிடத்தில் உள்ளன.

இந்த நாட்டில் சமஷ்டி தொடர்பில் பேசி 2026ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகளாகிவிடும். 1926ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க எழுதிய கட்டுரைகள் சமஷ்டி தொடர்பில் குறிப்பிட்டிருந்தன. ஆனால், 1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு முன்னர் குறிப்பிட்ட கட்டுரைகளின் மூலம் சமஷ்டி தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.

தந்தை செல்வாவும் இது தொடர்பில் உரைகளை நிகழ்த்தியிருந்தார். சிங்கள தேசிய இனத்தின் அடையாளம் மற்றும் நிலம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று இந்த மண்ணில் தோன்றி வளர்ந்த தமிழ்த் தேசிய இனத்தை அங்கீகரிக்காத வரையில் இந்த நாட்டின் தூய்மையான பயணங்களை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்ற கேள்விகள் உள்ளன.

நாங்கள் எங்கள் கரங்களை உங்களுடன் கோர்த்துக்கொள்ள விரும்புகின்றோம். இரு கரங்களும் இறுகப் பற்றிக்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த நாட்டில் சமமான பிரஜைகளாக வாழ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதனை புரிந்துகொள்ளுங்கள்.

தமிழர்கள் சம உரிமைகளை கேட்டபோதே வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. நீறுபூத்த நெருப்பைப் போன்றே இனப்பிரச்சினை உள்ளது. தமிழரின் கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யாதீர்கள். நாட்டில் நீங்களும் நாங்களும் சேர்ந்து வாழ வேண்டும். சமாதானத்தை அடையும் தூரம் நீண்டதாகத் தெரிகின்றது. அதனை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். உங்களின் காலத்தில் அதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வாருங்கள்.

நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டமையினாலேயே உங்கள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கிறோம்.

1987இல் கொண்டுவரப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தம் நாட்டில் இப்போதும் நடைமுறையில் இல்லை. இன்றும் அவை கிடப்பில் உள்ளன. இணைந்த வடக்கு, கிழக்கை உங்களின் ஜே.வி.பியினரே வழக்குத் தொடர்ந்து பிரித்தனர். ஆனால், சமாதானத்தின் கதவுகளைத் திறக்கும் சாவி உங்கள் கையில் உள்ளது. இது உங்களின் பொறுப்பாகும்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் பல்லின வல்லுனர் குழு அதிகாரப் பகிர்வு பற்றி பேசியது. 2009இல் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர் நினைத்திருந்தால் அப்போது அதிகாரப் பகிர்வுடன் கூடிய சமஷ்டியை வழங்கியிருந்தால் சிங்கள மக்கள் அதனை எதிர்த்திருக்க மாட்டார்கள். அதேபோன்ற வாய்ப்பொன்று இன்று உங்களின் கைகளில் உள்ளது. சிங்கள மக்கள் உங்களை நம்புகின்றனர். இந்த நம்பிக்கையூடாக சமாதான யுகத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வைக் கொண்டு வாருங்கள். அதனைப் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அதற்கான வாய்ப்பாக இந்தக் காலத்தைப் பயன்படுத்துங்கள்.

போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட முன்னான் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு இன முரண்பாட்டுக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வு சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

2015 மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டு சமஷ்டி முறைமை இலங்கைக்குச் சிறந்ததாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆகவே, தற்போதைய அரசுக்குச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Thinakaran
398 682.6K
  • Videos
  • Playlists
  • நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.  | Thinakaran news
    நுவரெலியா மாவட்டத்தில் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. | Thinakaran news 1 week ago
  • இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news
    இலங்கையில் இப்படியும் ஒரு போலீசாரா? : அதுவும் மட்டக்களப்பில் | Thinakaran news 1 week ago
  • யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news
    யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பிரச்சார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு: | Thinakaran news 1 week ago
  • 412 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற தேசிய வெசாக் வார நிகழ்வு..!

      by Thamil
      May 12, 2025
      0

      தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் இன்று மாலை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. மட்டக்களப்பு தலைமையக...

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வெசாக் தினக் கொண்டாட்டம்..!

      by Thamil
      May 12, 2025
      0

      கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது....

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      இராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த இராணுவ சிவில் விவசாய உத்தியோகத்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கண்டி - முறுத்தலை பகுதியைச் சேர்ந்த விதுர சஞ்சீவ மதுரட்ட...

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      சற்றுமுன் தென்னிலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளது பேரூந்தின் மீது தாக்குதல்..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேரூந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வேலணை...

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை உட்செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 12, 2025
      0

      யாழில் ஊசி மூலம் ஹெரோயினை செலுத்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ரொபின்சன் (வயது 27) என்ற ஒரு...

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      இன அழிப்பு வாரம் நிகழ்வினை புகைப்படம் எடுத்த பொலிஸுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

      by Thamil
      May 12, 2025
      0

      மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அங்குவந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் மக்களை புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர்...

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இலங்கைக்கு வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவரால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் என்ற போதைப்பொருளின் ஒரு தொகுதியை சுங்க அதிகாரிகள் பறிமுதல்...

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணத்தை கொள்ளையிட்ட ஒருவர் கைது..!

      by Thamil
      May 12, 2025
      0

      வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி ஒருவரிடமிருந்து பறக்கும் விமானத்தில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய சீனாவை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான...

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      தேசிய மக்கள் சக்திக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்..!

      by Thamil
      May 12, 2025
      0

      "அனைத்து அரசியல் கட்சிகளையும் திருடர்கள் என தெரிவித்த தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்களில் கட்சி சார்பற்று ஆட்சியமைக்க, அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" என...

      Load More
      Next Post
      அரசுக்கு ஏற்றால் போல எம்மால் ஆட முடியாது.!

      அரசுக்கு ஏற்றால் போல எம்மால் ஆட முடியாது.!

      எதிரணிகளை முடக்கிவிட்டு தேர்தலுக்குச் செல்லாதீர்கள் – சஜித் அணியினர் வலியுறுத்து.!

      எதிரணிகளை முடக்கிவிட்டு தேர்தலுக்குச் செல்லாதீர்கள் - சஜித் அணியினர் வலியுறுத்து.!

      கூரிய ஆயதத்தால் தாக்கி நபரொருவர் கொ லை.!

      கூரிய ஆயதத்தால் தாக்கி நபரொருவர் கொ லை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி