மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்றைய தினம் வவுனியா ஜங்ஸ்ரார் ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட செயலாளர் சரத் சந்திர மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார் கலந்து கொண்டு போட்டியினை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டச் செயலகம் இணைந்து நடத்தும் வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியிலே மாவட்ட செயலாளர் சரத் சந்திர, மேலதிக மாவட்ட செயலாளர் தி.திரேஸ்குமார், செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, உதவி மாவட்ட செயலாளர் சார்ஜா மற்றும் அரச உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
குறித்த போட்டியிலே வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.






