வவுனியாவில் 15 வயது மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்ததாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் ஆலயம் ஒன்றின் கட்டுமாணப் பணி இடம்பெற்று வரும் நிலையில், குறித்த ஆலயத்தில் மரவேலைகளில் ஈடுபட்ட 35 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது வேலியால் குறித்த பெண்ணை வீடியோ எடுத்ததாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டையடுத்து 35 வயதுடைய இளம் குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது தொலைபேசி இராசாயன பகுபாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.