இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இன்று (17) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் நான்காகப் பதிவான இந்த நடுக்கம் டெல்லி நேரப்படி அதிகாலை 5:36 மணியளவில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
டெல்லி, நொய்டா, குருகிராம் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம், 28.59 வடக்கு அட்சரேகையிலும், 77.16 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்திருந்ததாக NCS மேலும் கூறியது.