பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான, ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (13) ஆரம்பமானது.
காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று
காலை 10 .00 மணிக்கு வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
பதினைந்து தினங்களைக் கொண்ட மகோற்சவத்தில் எதிர்வரும் 25ம் திகதி இரவு பெரிய சப்பறத் திருவிழாவும், 26ம் திகதி காலை தேர்த்திருவிழாவும், அன்றிரவு சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளும் இடம்பெற்று மறுநாள் 27ம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





