யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த விடயத்தில் தவறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது அல்ல படுகாயமடைந்த நபர் மீது தான் தவறு என தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்று முன்தினம் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சென்றிருந்த போது குறித்த நபர் தேவை இல்லாமல் வந்து உணவருந்திக் கொண்டிருந்த அர்ச்சுனாவை சீண்டியுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சுனாவுக்கும் குறித்த நபருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இதன்போது அர்ச்சுனா குறித்த நபரின் தலையில் தாக்கியுள்ளார்.
இந்த விடயத்தில் தவறு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது அல்ல. குறித்த நபர் மீது தான் தவறு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.