கிளிநொச்சி அக்கறையான் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளிநொச்சி ஆடை தொழிற்சாலையில் இருந்து இன்று12.02.2025 மாலைஅக்கறையான் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை வழிமறித்து மதுபோதையில் வந்தவர் அக்கறையான் பகுதியில் பேருந்தின் கண்ணாடியை உடைத்ததுடன் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டு உள்ளார்.
அதே சமயம் கிளிநொச்சியிலிருந்து இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி அக்கறையான் பகுதிக்கு சென்ற பொழுது வீதியால் பயணித்த மற்றும் ஒரு பேருந்தின் மறித்து தனியார் பேருந்து சாரதி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆடை தொழிற்சாலை பேருந்தின் சாரதி மற்றும் தனியார் பேருந்து சாரதி இருவரும் அக்கறையால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அக்கறையான் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
