யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உரும்பிராய் பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை வன்முறை குழு ஒன்று தீயிட்டு எரித்துள்ளது. இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட் உந்துருளியை, வீட்டுக்கு வருகை தந்த வன்முறை கும்பல் தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
ADVERTISEMENT
சம்பவத்தில் உந்துருளி முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
