மல்லாவிப் பொலிஸ் நிலைய அதிகாரியான பகீ என்பவர் ஊழலில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மல்லாவிப் பொலிஸ் நிலைய அதிகாரியான பகீ என்பவர் தனது சகோதரிக்கு திருமணம் எனக் கூறி ஒரு ஏழை வீட்டில் கிடாய் ஆடு ஒன்றினை வாங்கியுள்ளார். அவர் அந்த ஆட்டினை வாங்கியபோது அதனுடைய நிறை 20kg ஆகும். எனினும் அந்த ஆட்டுக்கு 5000 ரூபாயே வழங்கியுள்ளார். ஆனால் அதன் பெறுமதி 30,000 ரூபாய் ஆகும். அதாவது ஒருகிலோ 1500 உயிர்நிறை ஆகும்.மிகுதிப் பணத்தினை தருமாறு கேட்டதற்கு ஆட்டுக்காறரின் மகனை 5 நாள் மல்லாவிப் பொலிஸில் தடுத்து வைத்துவிட்டு பிரச்சனை ஒன்றுமில்லை என அனுப்பியுள்ளனர்.
பின்னர் வீட்டுக்குள் நின்ற உந்துருளியை பகீ என்கிற பொலீஸ் அதிகாரி எடுத்துச் சென்றுள்ளார். அதனை எடுத்துச்செல்லும்போது குறித்த வீட்டின் மருமகன் புகைப்படம் எடுத்துள்ளார். அதற்காக இரண்டு நாட்கள் அவரை தடுத்து வைத்து விட்டு பினையில் விடுவதுபோல் தொலைபேசியை வாங்கி படங்களை அழித்து விட்டு அனுப்பியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான ஆதாரமாக எடுக்கப்பட்ட படங்கள் வேறொரு தொலைபேசிக்கு வட்சப் செய்யப்பட்ட படங்கள் உள்ளன அவை உரிமையாளரின் அனுமதியுடன் பதிவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
![](https://thinakaran.com/storage/2025/02/WhatsApp-Image-2025-02-08-at-06.34.52.jpeg)