பதுளை நகரில் உள்ள சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி பேருந்தின் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பெலிஹுலோயா, பம்பஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவரே உயிரிழந்தவர் ஆவார்.
சம்பவத்தன்று, பேருந்து சாரதி சேனாநாயக்கபிட்டிய பிரதேசத்தில் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த போது கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த பேருந்து சாரதி, வீதியில் வீழ்ந்து கிடந்த நிலையில், பிரதேசவாசிகளின் உதவியுடன் நோயாளர் காவுவண்டி மூலம் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வது தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.