வடமராட்சி கிழக்கு யா/உடுத்துறை மகா வித்தியாலய மரதன் ஓட்டப் போட்டி இன்று (6)இடம்பெற்றது.
வருடாந்த பாடசாலை இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு பாடசாலை முதல்வர் ந.தேவராஜா தலைமையில் இன்று காலை உடுத்துறை வேம்படி சந்தியில் இருந்து ஆண், பெண் இரு பாலருக்குமான மரதன் ஓட்ட நிகழ்வு ஆரம்பமானது.
இதில் வெற்றி பெற்ற இரு பாலருக்கும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மாமுனை அ.த.க பாடசாலையின் அதிபரும் யா/உடுத்துறை மகா வித்தியாலய பழைய மாணவனுமாகிய கணேசு-சந்திரமோகன் அவர்களால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிகளவான மாணவர்கள் கலந்து கொண்டதுடன், அதிகளவான பொதுமக்களும் பார்வையாளராக கலந்து கொண்டனர்.






